பாஜகவை வீழ்த்துவதே எங்கள் இலக்கு: உபியில் 100 தொகுதிகளில் போட்டியிட உள்ள ஒவைசி கட்சி...

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே எங்கள் இலக்கு அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

பாஜகவை வீழ்த்துவதே எங்கள் இலக்கு: உபியில் 100 தொகுதிகளில் போட்டியிட உள்ள ஒவைசி கட்சி...

 உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜகவை தோற்கடிக்க சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளன.இந்நிலையில், உத்தரப் பிரதேச தேர்தலில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி 100 இடங்களில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி அறிவித்துள்ளார்.

 இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓவைசி, உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே எங்கள் இலக்கு. தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த நாங்கள் தயார். ஆனால் பிறகட்சிகள் தான் முதலில் பேச வேண்டும் என கூறினார்.கூட்டணிக்காக எந்தக் கட்சியையும் நாங்கள் முதலில் அணுக மாட்டோம். நாங்கள் அடிமைகள் அல்ல. எங்கள் நலனுக்காகப் பணியாற்றுவோம். இந்துக்கள் எங்களது சகோதரர்கள். அவர்களுக்கும் தொகுதிகளை ஒதுக்குவோம் என ஓவைசி தெரிவித்துள்ளார்.