மைசூரின் நஞ்சனகுடு பகுதியில் உள்ள பழமைவாய்ந்த இந்து கோயில், கடந்த வியாழக்கிழமை நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த வீடியோவுடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்த ராமையா, மக்களின் ஒப்புதல் கேட்காமல் கோயில் இடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இது மத உணர்வை புண்படுத்துவதாக குறிப்பிட்ட அவர், புதிய கோயில் அமைத்துக்கொள்ள அதே இடத்தில் சிறிய இடம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.