கொரோனா வைரசுக்கு எதிராக இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ் 116 கோடியை நெருங்கியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ், 116 கோடியை நெருங்கி உள்ளதாகவும், இதன்படி தடுப்பூசி பெறுவதற்கு தகுதியுள்ளோரில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குறைந்தபட்சம், ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் 41 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இந்தியர்கள் நினைத்தால் முடியாதது ஏதுமில்லை என்ற பிரதமரின் கூற்றை நிரூபிக்கும் வகையில், தடுப்பூசி செலுத்துக் கொள்வதில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர் எனவும், வீடு வீடாகச் சென்று தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை அதற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது எனவும் புகழாரம் சூட்டியுள்ளது.