மலைபோல் குவிந்துள்ள குப்பைகளுக்கு வந்தது விடிவு காலம்…  

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ், பெரிய நகரங்களில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பை மேடுகள் முற்றிலும் அகற்றப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மலைபோல் குவிந்துள்ள குப்பைகளுக்கு வந்தது விடிவு காலம்…   

தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ், பெரிய நகரங்களில் மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பை மேடுகள் முற்றிலும் அகற்றப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள அம்பேத்கார் மையத்தில் நகர்ப்புறங்களுக்கான தூய்மை இந்தியா 2.0 மற்றும் அம்ருத் 2.0 ஆகிய திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். குப்பையில்லா நகரங்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் ஆகிய இலக்குகளை அடிப்படையாக வைத்து இந்த திட்டம் துவங்கப்பட்டது.  இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவில் நாள்தோறும் ஒரு லட்சம் டன் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதாகத் தெரிவித்தார். 

தற்போது 70 சதவீத குப்பை மறுசுழற்சி செய்யப்படுவதாகத் தெரிவித்த அவர், அதனை 100 சதவீதமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தின் கீழ் டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் நீண்ட காலமாக உள்ள குப்பை மலைகள் முற்றிலும் அகற்றப்படும் எனவும் உறுதியளித்தார். தூய்மை இந்தியா 2.0 மற்றும் அம்ருத் 2.0 திட்டங்கள் மூலம் அம்பேத்கரின் கனவை நனவாக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இணையமைச்சர் கவுசல் கிஷோர் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தூய்மை இந்தியா 2.0 திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்தார்.