மேல்முறையீட்டில் சமநீதி கிடைக்குமா? ஒவைசி கூறுவதென்ன!!!!

மேல்முறையீட்டில் சமநீதி கிடைக்குமா? ஒவைசி கூறுவதென்ன!!!!

ஞானவாபி மீதான வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார். 

ஞானவாபி தீர்ப்பு:

ஞானவாபி சிருங்கர் கௌரி வழக்கின் பராமரிப்பை கேள்விக்குள்ளாக்கிய மனு வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தால் திங்களன்று தள்ளுபடி செய்யப்பட்டது, மேலும் வழிபாட்டு உரிமை கோரும் மனு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றும்  நீதிபதி கூறியிருந்தார். 

ஒவைசியின் கருத்து:

இது தொடர்பாக ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் தற்போது கருத்து தெரிவித்துள்ளார். ”இந்த தீர்ப்பினால் 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் முக்கியத்துவம் இழக்கப்படும் என்று ஒவைசி தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த தீர்ப்பினால் நாடு மீண்டும் 80-90 காலக்கட்டத்துக்கு திரும்பும் என்றும், இதனால் வழிபாட்டு தல சட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்படும் “ என்றும் ஒவைசி கூறியுள்ளார்.

இழைக்கப்பட்ட அநீதி:

”1991 ஆம் ஆண்டு வழிபாட்டு தலச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் இதுபோன்ற அனைத்து சர்ச்சைகளும் என்றென்றும் முடிவடையும்” என்று ஒவைசி கூறியுள்ளார். ”ஆனால் இந்த தீர்ப்புக்குப் பிறகு இதுபோன்ற பிரச்னைகள் அனைத்திலும் மீண்டும் சட்ட வழக்குகள் தொடங்கும்.  நாங்கள் மீண்டும் 80கள் மற்றும் 90 கள் காலக்கட்டத்திற்கு திரும்புகிறோம். பாபர் மசூதி விவகாரம் எந்த வழியில் சென்றதோ, அதே வழியில் தான் இந்த வழக்கும் நடக்கிறது. இதுபோன்ற வழக்குகளை ஆரம்ப நிலையிலேயே நீதிமன்றம் நிறுத்த வேண்டும்.” என்றும் ஒவைசி கூறியுள்ளார். மேலும், ஞானவாபி மஸ்ஜித் வக்ஃப் வாரியத்தின் நிலம் என்று ஓவைசி தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com