பட்டாசு தயாரிப்பில் நீதிமன்ற தடையை மீறி விதிமீறல்- உச்ச நீதிமன்றம் கண்டனம்

பட்டாசு தயாரிப்பில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட, பேரியம் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டு மிகக் கடுமையான விதிமீறல் நடைபெற்றுள்ளதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
பட்டாசு தயாரிப்பில் நீதிமன்ற தடையை மீறி விதிமீறல்-  உச்ச நீதிமன்றம் கண்டனம்
Published on: 
Updated on: 
1 min read

பட்டாசு தயாரிப்பில், நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட, பேரியம் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டு மிகக் கடுமையான விதிமீறல் நடைபெற்றுள்ளதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது, பட்டாசு வெடிக்கும் நேரத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி, தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, பட்டாசு தொழிற்சாலைகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் நடத்திய ஆய்வின் முதற்கட்ட அறிக்கை குறித்து உத்தரவிட்ட நீதிபதிகள், பெரும்பாலான பட்டாசுகளில் தடைசெய்யப்பட்ட பேரியம் என்ற ரசாயனம் பயன்படுத்தப்பட்டு இருப்பது சி.பி.ஐ., ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவை மீறி பேரியத்தை பயன்படுத்திய உற்பத்தியாளர்கள் மீது ஏன் வழக்கு பதிவு செய்ய கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் இன்னும் ஆறு வார காலத்தில் முழுமையான அறிக்கையை சி.பி.ஐ., தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு அடுத்த மாதம் 6ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com