WFI: பிரிஜ் பூஷன் மருமகன் போட்டி?

WFI: பிரிஜ் பூஷன் மருமகன் போட்டி?
Published on: 
Updated on: 
1 min read

இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தேர்தலில் தனது மருமகனை போட்டியிட வைக்க பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பிரிஜ் பூஷனை இந்திய மல்யுத்த கூட்டமைப்புத் தலைவர் பதவியில் இருந்து விலகக் கோரி போராட்டம் வெடித்தது. மத்திய அமைச்சர் அனுராக் தாகூருடன், வீராங்கனைகள் நடத்திய பேச்சுவார்த்தையில் பிரிஜ் பூஷன் குடும்பத்தினர், கூட்டமைப்பில் இடம்பெறமாட்டார்கள் என உறுதியளிக்கப்பட்டது. 

தொடர்ந்து ஆகஸ்ட் 12ம் தேதி மல்யுத்த கூட்டமைப்புத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளையுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைகிறது. இந்நிலையில் பீகாரின் பிரதிநிதியாக விஷால் சிங்கை பிரிஜ் பூஷன் போட்டியிட வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com