ஆம் ஆத்மி கட்சியினரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுமா?

ஆம் ஆத்மி கட்சியினரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுமா?
Published on
Updated on
1 min read

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை இழுத்து ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக முதல்வர் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.

ரூபாய் 20 கோடி பேரம்

தங்களிடம் பாரதிய ஜனதா கட்சி ரூபாய் 20 கோடி பேரம் பேசியதாக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பேரம் பேசியதாக சொல்லப்படும் ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி உள்ளது.

உண்மை கண்டறியும் சோதனை

இது தொடர்பாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரி கூறும்போது, மதுபான கொள்கை விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள் தொடர்ந்து தங்களது அறிக்கைகளை மாற்றி வருகின்றனர். பாஜக 20 கோடி ரூபாய் பேரம் பேசியதாக குற்றச்சாட்டை கூறியிருப்பதால் இந்த விவகாரம் குறித்து தடயவியல் விசாரணைக்கு உத்தரவிட்டு அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும் என்றார்.


logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com