”மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும்” - அனுராக் தாக்கூர்!

”மல்யுத்த வீரர்கள் பொறுமை காக்க வேண்டும்” - அனுராக் தாக்கூர்!
Published on
Updated on
1 min read

டெல்லி காவல்துறையின் விசாரணை முடியும் வரை மல்யுத்த வீரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மல்யுத்த வீரங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது புகார் தெரிவித்ததையடுத்து, தன் மீது வீரர்கள் கொடுத்துள்ள புகார் உண்மை என நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்க கூட தயார் என பிரிஜ் பூசணும், ஆதரம் இல்லாததால், அவரை கைது செய்ய முடியாத நிலையில் இருப்பதாக காவல்துறையும் கூறி வருகிறது. ஆனாலும், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வீரர்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும் எனவும், எவ்வித தீங்கு விளைவிக்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com