பெயர்களை மாற்றுவதை நிறுத்துங்கள்... கேரள முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்...

கன்னட பெயர்களை மாற்றுவதை நிறுத்துங்கள் என்று கேரள முதல்வருக்கு எடியூரப்பா கடிதம் எழுதியுள்ளார்.
பெயர்களை மாற்றுவதை நிறுத்துங்கள்... கேரள முதல்வருக்கு எடியூரப்பா கடிதம்...
கேரள கிராமங்களின் அசல் கன்னட பெயர்களை மாற்றுவதை நிறுத்துமாறு கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகா- கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது காசர்கோடு மாவட்டம். இந்த மாவட்டம் கேரளாவில் உள்ளது. இந்த மாவட்டத்தில் கன்னடம் பேசும் அதிகமான மக்கள் எல்லையோர கிராமங்களில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கேரளாவின் உள்ளாட்சி அமைப்பு, சில கிராமங்களின் கன்னட பெயர்களை மாற்றியுள்ளது. இதற்கு கர்நாடக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எல்லையோர கிராமங்களின் கன்னட பெயர்களை மாற்றுவதை நிறுத்துமாறு கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி. குமாரசாமியும் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com