தும்பல் விட்டு உயிர் விட்ட இளைஞன்.. தொடரும் இளம் உயிரிழப்புகள்...

நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்ற போது, தும்மல் விட்ட இளைஞர் ஒருவர் திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தும்பல் விட்டு உயிர் விட்ட இளைஞன்.. தொடரும் இளம் உயிரிழப்புகள்...
Published on
Updated on
1 min read

மீரட் | தற்போது ஒரு வைரல் வீடியோ வெளியாகி அனைவரது மனதையும் பதை பதைக்க வைத்துள்ளது என்றே சொல்லாலாம்.

ஒரு இளைஞர், தனது 3 நண்பர்களுடன் சாலையில் இரவு நேரம் நடந்து செல்கையில், திடீரென தும்மல் எடுத்துள்ளார். பின், தனது அருகில் இருந்த நண்பரின் தோளை சாய்மானமாக பிடித்தப்படியே மயங்கி, திடீரென அபடியே விழுந்து விட்டார்.

ஒன்றும் புரியாத அந்த இளைஞரின் நண்பர்கள், அவரை எழுப்ப முயற்சி செய்தும் பயனில்லாமல் போகும் நிலையில், அவரைத் தூக்க முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த நண்பர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

திடீரென விழுந்த அந்த இளைஞரைக் காப்பாற்ற அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..! ஏன் என்றால், ஆரோக்கியமாக அவ்வளவு நேரம் நண்பர்களோடு பேசி சென்ற அந்த இளைஞர், ஒரு தும்மல் விட்டதும் உயிரிழந்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பியதோடு, பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அந்த வாலிபரின் பெயர் ஜுபேயர் என்றும், அவருக்கு 18 வயதே ஆகியுள்ளது என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. (தகவல் - தைனிக் பாஸ்கர்). மேலும், கிட்வாய்நகர் பகுதியின் 3ம் வட்டத்தில் வசித்த இந்த இளைஞர், திடீரென தும்பியதால், மாரடைப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகிக்கப் படுகிறது.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வர, இது போன்ற எதிர்பாராத மற்ற சில உயிரிழப்புகள் குறித்தும் தகவல்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்... அதன்படி, சமீபத்தில், ஒருவ, மத்திஅய் பிரதேச மாநிலத்தின் கத்னி பகுதியில் உள்ள சாய் பாபா கோவிலில் வேண்டிக் கொண்டிருக்கும் போது, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மேலும், கடந்த வெள்ளிக் கிழமை (2.12.22) அன்று திருமண மேடையில், மணப்பெண், தனது வருங்கால கணவருக்கு மாலை சூடும் நேரம், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த பெண்ணிற்கு மாரடைப்பு வந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com