அழுவதற்கு தனி அறை! மன அழுத்தத்திற்காக நிதி ஒதுக்கும் நாடு!

மன அழுத்தத்தில் வாடும் மக்களுக்காக வடிவமைக்கப்பட்ட அழுகை அறை ஸ்பெயின் நாட்டில் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

அழுவதற்கு தனி அறை! மன அழுத்தத்திற்காக நிதி ஒதுக்கும் நாடு!

உலகில் மனிதனுக்கு இருக்கும் மிகப்பெரிய எதிரியே அவனுடையே மன பலவீனம் தான். ஒருவனுக்கு மன அழுத்தம் அதிகமாக அதிகமாக தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது.

அதிலும் சிலர் எப்படிப்பட்ட துன்பத்தில் இருந்தாலும் அழுகையே வராது.அதேபோல், கடும் மன அழுத்தத்தில் இருப்பவர்களும் எளிதில் அழுதுவிட மாட்டார்கள். அவ்வாறிருப்பின்,ஒருவன் அழுகையை அடக்கினால் அவனுக்கு மேலும் மன அழுத்தம் அதிகமாகும்.

அதனால்,தற்கொலைகளும் அதிகரிக்கும்,எனவே, கவலை இருந்தால் கண்ணீர் விட்டு அழுவது மிகவும் முக்கியமான ஒன்று. இதனை கருத்தில் கொண்ட ஸ்பெயின் நாட்டினர் இப்படி, கவலை மற்றும் மன நல பிரச்சனையில் உள்ளவர்கள் அழுவதற்கு என்றே அங்கு தனி அறையை உருவாக்கியிருக்கிறார்கள்.

 ’அழுகை அறைக்கு வரவேற்கிறோம்’ என்று வினோதமான வாசகத்துடன் வரவேற்கிறது ஸ்பெயினின் மாட்ரிக் நகரில் அமைந்துள்ள அழுகை அறை.

மனநல பிரச்சினையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட  புதிய முயற்சி ஸ்பெயின் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மன கவலையில் இருப்போர் மனம் திறந்து அழுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அறையில் உளவியல் மருத்துவர் உட்பட மனச்சோர்வடையும் போது அழைக்கக்கூடிய நபர்களின் பெயர்களுடன் கூடிய தொலைபேசிகள் உள்ளன.

அவர்களைத் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் பெற்று கொள்ளலாம். வித்தியாசமான இந்த அழுகை அறைக்கு வரவேற்பு அதிகரித்தவண்ணம் உள்ளனர். மேலும்,மனதில் கவலை உள்ளவர்கள் பலர் இந்த அறைக்கு தேடி வந்து அழுது ஆறுதல் தேடிவருகின்றனர்.