“மனவளர்ச்சி குன்றிய, குறையுடைய குழந்தைகளை வெறுத்து ஒதுக்காதீர்கள்” - பெற்றோர்கள் வேண்டுகோள்

“மனவளர்ச்சி குன்றிய, குறையுடைய  குழந்தைகளை  வெறுத்து ஒதுக்காதீர்கள்” -  பெற்றோர்கள் வேண்டுகோள்

“மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் பார்வை திறன் குறைந்த குழந்தைகளை பொது இடங்களில் பொதுமக்கள் வெறுத்து ஒதுக்காதீர்கள்” - பெற்றோர்கள் வேண்டுகோள்

 கோவையில் தொழில் வளர்ச்சி நிறுவனம் திரு அப்துல் ரஹீம் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும்  மூளை வளர்ச்சித் திறன் குறைந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது

 இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை சிறப்பு சிபிசிஐடி  உதவி ஆய்வாளர் திரு. ராக்கி மகேஷ், கலந்து கொண்டார்.  மேலும் சிறப்பு குழந்தைகள் கல்வியாளர் திரு ரகுராம், ஊட்டி  சாக்லேட்  நிறுவனர் முஹம்மது யூசுப் ராஜா, பார்வைத் திறனற்ற கோவை அரசு  கலைக் கல்லூரியின் associate professor Elizabeth Lavanya  மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் கும்பகோண கண்ணன்  ஆகியோர் கலந்துகொண்டு கண்பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநிலை குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சாதனையாளர்கள் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

பின்னர் நடைபெற்ற நிகழ்வில் மனவளர்ச்சி குன்றிய பார்வையற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது  குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டுமென ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.

மேலும் பாரவையிழந்த பட்டதாரி வாலிபர் யூனியன் வங்கியின் மேலாளராக பணிபுரியும் பாலமுரளி கிருஷ்ணன் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து அதை பெறுவதற்கான வழிமுறைகளும் வழிகாட்டல் நெறிமுறைகளையும்  ஐந்து மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு சுய உதவி குழுக்களை அமைத்து மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து பொதுத்துறை வங்கிகளிடத்திலும் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற்று தொழில்  தொடங்குவதற்க்கான வழிகளை விளக்கினார்.