பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்து சீருடைகள் தயாரிப்பு..!
இந்தியாவில் மறுசுழற்ச்சி செய்யபட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.
இந்தியாவில் மறுசுழற்ச்சி செய்யபட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது.
“மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் பார்வை திறன் குறைந்த குழந்தைகளை பொது இடங்களில் பொதுமக்கள் வெறுத்து ஒதுக்காதீர்கள்” - பெற்றோர்கள் வேண்டுகோள்
கோவையில் தொழில் வளர்ச்சி நிறுவனம் திரு அப்துல் ரஹீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூளை வளர்ச்சித் திறன் குறைந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை சிறப்பு சிபிசிஐடி உதவி ஆய்வாளர் திரு. ராக்கி மகேஷ், கலந்து கொண்டார். மேலும் சிறப்பு குழந்தைகள் கல்வியாளர் திரு ரகுராம், ஊட்டி சாக்லேட் நிறுவனர் முஹம்மது யூசுப் ராஜா, பார்வைத் திறனற்ற கோவை அரசு கலைக் கல்லூரியின் associate professor Elizabeth Lavanya மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் கும்பகோண கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கண்பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநிலை குன்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சாதனையாளர்கள் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
பின்னர் நடைபெற்ற நிகழ்வில் மனவளர்ச்சி குன்றிய பார்வையற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டுமென ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர்.
மேலும் பாரவையிழந்த பட்டதாரி வாலிபர் யூனியன் வங்கியின் மேலாளராக பணிபுரியும் பாலமுரளி கிருஷ்ணன் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்படும் நலத்திட்டங்கள் குறித்து அதை பெறுவதற்கான வழிமுறைகளும் வழிகாட்டல் நெறிமுறைகளையும் ஐந்து மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு சுய உதவி குழுக்களை அமைத்து மத்திய அரசின் கீழ் இயங்கும் அனைத்து பொதுத்துறை வங்கிகளிடத்திலும் குறைந்த வட்டியில் கடன்களைப் பெற்று தொழில் தொடங்குவதற்க்கான வழிகளை விளக்கினார்.
தன்பாலின திருமணத்துக்கு ஆதரவான தனது கருத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் நடத்திய இந்திய-அமெரிக்க உச்சநீதிமன்ற முன்படிகள் ஆலோசனையில் அவர் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது மனசாட்சியின் தீர்ப்பே அரசியலமைப்பின் தீர்ப்பு எனவும், தன்பாலின உரிமைகளுக்கான தனது ஆதரவு தொடரும் எனவும் அவர் கூறினார்.
முன்னதாக தன்பால் ஈர்ப்பு திருமண அங்கீகார வழக்கில் 5 பேர் அடங்கிய நீதிபதி அமர்வு விவாதித்து 3 நீதிபதிகள் தன்பால் ஈர்ப்பு திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 2 நீதிபதிகள் ஆதரவு தெரிவித்தும், அதனடிப்படையில், தன்பாலின ஈர்ப்பு திருமணங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினார்.
அப்போது, மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய அவர், அத்திருமணங்கள் நகர்புறக் கருத்தாக்கம் இல்லை - மனிதர்கள் காதல் வயப்படுவது இயற்கையான நிகழ்வு எனக்கூறி ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை..!
கையால் மலம் அள்ளும் முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், பணியின்போது உயிரிழப்போரின் குடும்பத்திற்கு இழப்பீடு 30 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
கையால் மலம் அள்ளும் பணிகுறித்து உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்...
தொழில்நுட்பங்கள் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் பணியில் ஈடுபட்டிருப்பது மனிதர்கள்தான். மலம் அள்ளுவது மனித மாண்புக்கு எதிரான செயல் என்று காலம் காலமாக குரல் கொடுத்து வந்தாலும் தற்போதுவரை அதற்கான தீர்வு இல்லை என்பதே நிதர்சனம்
உயிருக்கு ஆபத்தான பணி என்று தெரிந்தும் துப்புரவு பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுவது ஏன்? விளைவுகள் தெரிந்தும் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது ஏன்? மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் சோதனை நடைபெற்று வரும் நாட்டில் இதற்கு தீர்வு காணமுடியாதது ஏன்? என்பன போன்ற பல்வேறு கேள்விகள் நம்மை உலுக்கிக்கொண்டிருக்கின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட 330 பேர் உயிரிழந்திருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 51 பேர் என்றும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் அதிகம் என்பதும் குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நடைமுறையை முற்றிலும் ஒழிக்க வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.
1). மனிதக்கழிவுகளை கையாள மத்திய அரசு உரிய கொள்கைகளை வகுக்க வேண்டும் என்றும் மனிதர்களை இந்தப்பணியில் பயன்படுத்த கூடாது என்பதை உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒப்பந்தரர்களுக்கும் தெளிவாக அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
2). மத்திய அரசு வகுக்கும் கொள்கைகளை அனைத்து மாநிலங்களும் முறையாக பின்பற்ற வேண்டும்.
3). கழிவுகளை கையாளும் பணியாளர்கள் மற்றும் கழிவுகளை கையாளும்போது இறக்க நேரிடும் பணியாளர்களின் வாரிசுதாரர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து மறுவாழ்வுகளையும் மத்திய மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்
4). கழிவுகளை கையாளும்போது இறக்கும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீட்டை 10 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்த வேண்டும்.
5).கழிவுகளை கையாளும்போது குறைபாடுகளுடன் பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு 10 லட்சத்திற்கு குறைவாக இருத்தல் கூடாது.
அவர்களின் குறைபாடுகள் அதிகமாக இருந்து, பொருளாதார உதவியற்ற நிலையில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு 20 லட்சத்திற்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.
6). கழிவுகளை கையாள முறையான இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் பணியாளர்கள் இறந்தால் சம்மந்தப்பட்ட ஒப்பந்தாரர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
7). தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மற்றும் மத்திய அரசு ஆகியவை ஒன்றிணைந்து கழிவுகளை கையாள்வது குறித்த சர்வே ஓராண்டுக்குள் நடத்தி அதனை செயல்படுத்திட வேண்டும்.
என்பன உள்ளிட்ட 14 வழிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது.
இதையும் படிக்க | தொடரும் தாக்குதல்கள்: குடிசைகளில் தஞ்சம் அடைந்த பாலஸ்தீனியர்கள்
தன்பாலின திருமணம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இயக்குநர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் தனியார் வைத்தியசாலை தொடக்க நிகழ்ச்சியில் இயக்குநர் பா. ரஞ்சித், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, நடிகர்கள் நந்தகுமார், சௌந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் ரஞ்சித்:-
தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டமாக இருக்கும் நிலையில், சட்ட அங்கீகாரம் மறுப்பது, உள்நோக்கங்கள் உள்ள தீர்ப்பாக பார்க்கப்படுவதாக கூறினார். மேலும்,தங்கலான் டீசர் அடுத்த வாரத்தில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க | "இந்தியா என்ற தனது வீட்டுக்காக பாஜகவை எதிர்ப்பேன்" - ராகுல் காந்தி
வருகின்ற ஏழாம் தேதி தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் தினம் கொண்டாடப்பட உள்ளதாக முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில் வன உயிரின வார விழாவினை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளிடையே வனவிலங்குகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வனவிலங்குகள் குறித்த புகைப்பட கண்காட்சி இன்று நடைபெற்றது.
இந்த புகைப்பட கண்காட்சியை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் துவக்கி வைத்து புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உதகையை அடுத்த சின்ன குன்னூர் வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4 புலி குட்டிகள் உயிரிழந்தது. இந்த புலி குட்டிகளின் 234 என்று அழைக்கக்கூடிய தாய் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும், வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ள புலிகள் 234 என்று அழைக்க கூடிய தாய் புலியா என்று தணிக்கை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் அந்த தாய் புலி வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்து உள்ளதா, அல்லது வேறு புலியுடன் சண்டையிட்டு உயிரிழந்துள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த தாய் புலியை தேடும் பணியின் போது புலியின் சில தடயங்கள் கிடைத்துள்ளதாகவும், அதனை ஹைதராபாத் மற்றும் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு இறந்த 4 புலி குட்டிகளின் மாதிரிகளுடன் ஒத்துப் போகிறதா என்கிற ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் தாய் புலியை தேடும் பணியில் வனத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் வருகிற அக்டோபர் 7ம் தேதி மாநிலத்தின் தேசிய விலங்கான வரையாடுகள் தினம் நீலகிரி மாவட்டத்தில் அனுசரிக்கப்பட உள்ளதாகவும் மாவட்டத்தில் முக்குருத்தி வனப்பகுதியில் கணிசமான வரையாடுகளின் வாழ்விடமாக திகழ்வதாகவும், இந்த ஆண்டு முதன் முறையாக வரையாடுகள் தினம் கொண்டாடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.