#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு சொல்ல மாட்டேங்கிறாரா..? 

ஆண்களுக்கும் பெண்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை எப்படி அவர்கள் வெவ்வேறு விதத்தில் உளவியல் ரீதியாக டாக்கில் செய்கிறார் என்பதை பார்க்கலாம்
#relationshipஅட்வைஸ், உங்க லவ்வர் செல்போன் பாஸ்வேர்டு சொல்ல மாட்டேங்கிறாரா..? 

ஆண்களுக்கும் பெண்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகளை எப்படி அவர்கள் வெவ்வேறு விதத்தில் உளவியல் ரீதியாக டாக்கில் செய்கிறார் என்பதை பார்க்கலாம்

1. ஆண்கள் போதுவாக மன அழுத்தத்தில் இருக்கும் போது தனிமையே விரும்புகிறார்கள். ஒரு பிரச்சனை அவருக்கு ஏற்படும் பட்சத்தில் அவர் அதனை வெளி காண்பிக்காமல் தனிமையில் இருந்து முடிவு எடுக்க நினைப்பார்.

ஆனால் பெண்கள் அப்படி இல்லை, ஒரு பிரச்சனையோ அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலோ தனக்கு நெருக்கமாக இருக்கும் நபரிடம் அதனை சொல்ல நினைத்து, மணி கணக்கில் அது குறித்து விவாதித்த பின்பே பிரச்சனையை விட்டு வெளியே வருவார்.

இது புரிந்து கொள்ளலாம் பெண்கள், ஆண்களை தவறாக புரிந்து கொள்வார்கள்.

இதனால் இருவருக்கிடையே மனகசப்பு ஏற்பட ஆரம்பிக்கிறது. காரணம் தனிமையை விரும்பி மன அழுத்தத்தில் இருக்கும் ஆண்களிடம் பேசி பேசி பெண்கள் மன அழுத்தத்தை அதிகப்படுத்துவார்கள்.

ஆனால் ஆண்கள் கோபத்தை குறைக்க வேண்டி தனிமையில் இருக்க விரும்புவார்கள், அப்போது பெண்கள், என்ன நான் பேசுவதை கண்டு கொள்ளலாம், என்னை ignore செய்கிறார் என்று தவறாக புரிந்து கொள்வார்கள்.

நீங்க ஆண் இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி, இனிமே இத ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் ஒன்னு பெண்கள் அமைதியாக போக வேண்டும் அல்லது ஆண்கள் பேசி சரி செய்ய வேண்டும்.. ஆனால் இது இரண்டுமே உளவியல் ரீதியாக மாறுப்பட்டவையே.

2. ஒரு ஆணும் பெணும் ஒரு relationship-ல இருக்கும் போது தங்களுக்குள்ளே மரியாதை கொடுத்துக்கொள்வதை மறந்துவிடுகிறார்கள்.

அதாவது நம்மலோட மனைவி, கணவர் தானே அல்லது நம்மலோட லவ்வர் தானே என்று தனிநபருக்கு கொடுக்க வேண்டிய அடிப்படை மரியாதையை கொடுக்க மறந்துவிடுகிறார்கள்.

மாறாக அவர்களை சின்ன சின்ன விஷயத்தில் மரியாதையா நடத்தி பாருங்க, இருவருக்கும் இடையே சற்று அன்பும் அதிகரிக்கும் அடடா! இதுல கூட என்னவன்/ என்னவள் முக்கியத்துவம் கொடுக்கிறார்களே என்று.

3. சில relationship-ல பிரைவசி இல்லாத நிலை இருக்கிறது. அதாவது, என்னவன்/ என்னவள் எல்லா விஷயங்களையும் பகிர வேண்டும்.  நமக்குள் என்ன ரகசியம். என்றெல்லாம் பேசுவார்.

முழு நேரத்தையும் தன்னிடம் மட்டுமே செலவிட வேண்டும் என்று கூறுவார்கள். ஒரு ஆணும் பெணும் நன்றாக புரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. நீங்க இருவரும் ஒரு relationship-ல இருக்கிறீர்கள் என்பதால், மனிதரின் தனிப்பட்ட விஷயங்களுக்குள் செல்வீர்கள், இதனால் ஒரு கட்டத்தில் இருவருக்குமிடையே மனகசப்பு ஏற்படும்

அதனால் அதீத அன்பு என்ற பெயரில் ஒரு  ஆண்- ஐ முழுவதும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று முயற்சித்தால் அவர்களை உங்களுக்கு பிடிக்காமல் போக நேரிடும்.

அவரவர்களுக்கு ஒரு நட்பு வட்டாரங்கள் உள்ளன, சோசியல் சர்க்கிள் உள்ளன. அதனையும் அவர்கள் பார்க்க வேண்டும் எனவே ஒரு ஆணோ, பெண்ணோ இதனை புரிந்துக் கொள்ள வேண்டும்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com