மெட்ரோ பணிகளால்  மூடப்பட்ட கடற்கரை சாலை: கேள்விக்குறியான வியாபாரிகளின் வாழ்க்கை.

மெட்ரோ பணிகளால்  மூடப்பட்ட கடற்கரை சாலை:  கேள்விக்குறியான வியாபாரிகளின் வாழ்க்கை.

மெட்ரோ பணிகளால்  மூடப்பட்ட கடற்கரை சாலை:  கடற்கரையில் வியாபாரம்  செய்து வந்த மக்களின் வாழ்க்கையே கேள்விக்குறியானது.

மெட்ரோ பணிகளால் மூடப்பட்டிருக்கிற கடற்கரை சாலையில் குறிப்பிட்ட பகுதி அவ்வையார் சிலைக்கு பின்புறம் இருந்து வியாபாரம் செய்து வந்த கடற்கரையில் வியாபாரிகள் தங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியானது தங்களுக்கு மாற்று இடத்தில் கடை அமைத்து தரவும் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற கோரியதும் மாற்று இடத்திற்கான ஏற்பாடுகளை யாரிடம் அணுகுவதென்ற கேள்விகளோடு அங்கே கடைநடத்திய மனிதர்களின் வாழ்க்கை பற்றிய தற்போதைய சிக்கல்களை  விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. 

கடலையும் கடற்கரையும் நம்பி சென்னை மட்டுமல்லாது சென்னையில் இருந்து பல நூறு மயில்களில் இருந்து பல்வேறு தேசங்களில் இருந்து வரும் மக்களையும் சென்னை மெரினா கடற்கரை தாயாக அரவணைத்து காப்பாற்றி சிறு கடை நடத்துவதற்கும் வியாபாரம் செய்வதற்கும் சுண்டல் தொடங்கி பொம்மை என தொழில் செய்வதற்கான அன்னை மடியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் சுமார் 2000க்கும் மேற்பட்ட கடைகள் சென்னை மெரினா கடற்கரையில் அவ்வையார் சிலைக்கு பின்புறம் இருந்து வருகிறது இந்த கடைகள் மெட்ரோ பணிகள் நடைபெறுவதன் காரணமாக அந்த சாலையில் எந்தவிதமான போக்குவரத்தும் இருக்கக் கூடாது என்று மெட்ரோ நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு அந்த வழி அடைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அங்கு இருக்கும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் அந்த கடைகளை நம்பி தொழில் செய்யும் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

அவ்வையார் சிலைக்கு பின்புறம் தொடங்கி சர்வீஸ் சாலையில் உள்ள எந்த விதமான போக்குவரத்தும் இருக்கக் கூடாது என்ற மெட்ரோ நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கிறது அந்த வழியே சென்று வந்த ஒன்று இரண்டு வாகனங்களும் இப்போது செல்வதற்கு தடை ஏற்பட்டிருக்கிறது.

அந்த கடைகளை வைத்திருந்த அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது காரணம் ஊர் அளவு பாதை அடைக்கப்பட்டிருந்த சூழலில் ஒன்று இரண்டு வாகனங்கள் சென்று வந்தது அதன் மூலமாக அவர்கள் இந்த கடைகளின் மூலமாக வியாபாரத்தை நடத்தி வருமானம் ஈட்டி வந்தார்கள். இப்போது முழுவதுமாக அந்த சாலையின் இரு மரங்களும் அடைக்கப்பட்டு இருக்கிற காரணத்தால் ஒரு வாகனம் கூட உன் செல்ல முடியவில்லை நடந்து செல்பவர்களும் குறைவான அளவில் இருப்பதால் அங்கு இருக்கிறவர்கள் கடையை திறக்க கூடாது திறப்பதற்கான வழியும் இல்லை என்ற பட்சத்தில் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள் அங்கு கடை நடத்தி வந்த மக்கள்.

கடைகள் நடத்துவதற்கு மாற்று இடத்தை ஏற்படுத்தி தருமாறு அரசிடமும் மெட்ரோ நிர்வாகத்திலும் இதன் மூலமாக கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com