சூட்டு கொப்பளம் தழும்பு இல்லாம சரியாக வேண்டுமா?

சூட்டு கொப்பளம் பெரும்பாலும் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் நேரத்தில் ஏற்படுகின்றது. குறிப்பாக வெயில் காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூட்டுக் கொப்பளங்களால் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.
சூட்டு கொப்பளம் தழும்பு இல்லாம சரியாக வேண்டுமா?

சூட்டு கொப்பளம் பெரும்பாலும் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் நேரத்தில் ஏற்படுகின்றது. குறிப்பாக வெயில் காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சூட்டுக் கொப்பளங்களால் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். மேலும் சூட்டு கொப்பளம் தோலில் தோன்றும் போது பல்வேறு விதமான சங்கடங்களை சந்திக்க நேரிடுகின்றன. இதனால் பல அசௌகரியங்கள் உண்டாகின்றன. சூட்டுக் கொப்பளங்களைப் பற்றி மேலும் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும், எப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதாகக் குணப்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளவும் மேலும் படியுங்கள்;

ஏன் சூட்டு கொப்பளம் ஏற்படுகின்றது?

சருமத்தில் உள்ள மயிர்க்கால்கள் மற்றும் எண்ணெய் சுரப்பிகள் போன்ற பகுதிகளில் பாக்டீரியா உண்டாவதால் அதிகம் ஏற்படுகின்றது. இந்த பாதிப்பு ஏற்பட்ட இடத்தில் கட்டி உண்டாகி சில நாட்களில் சீல் ஏற்படும்.

சூட்டுக் கொப்பளம் பொதுவாக முகம், கழுத்து, அக்குள், தோள்கள் மற்றும் பிட்டம் ஆகிய இடங்களில் தோன்றும். இது கண்களிலும் கட்டியாகத் தோன்றும். பெரும்பாலும் இவை உடலின் பல்வேறு இடங்களில் தோன்றும்.

சூட்டுக் கொப்பளம் ஏற்பட்டால் என்ன செய்யக் கூடாது?

இந்த சூட்டுக் கொப்பளம் ஏற்பட்டால், அவற்றை உடைத்து விடுவதோ அல்லது கிள்ளி விடுவதோ கூடாது. அவை தானாகக் குணமடைய வேண்டும். அப்படி இல்லாமல் உடைத்து விட்டால், அது மேலும் உடலில் பரவி, அதிகமாகிவிடும் வாய்ப்புள்ளது.

சூட்டுக் கொப்பளம் குணமாக எவ்வளவு நேரம் தேவைப்படும்?

இவை குறைந்தது 2 நாட்கள் முதல் 3 வாரங்கள் வரை இருக்கும். இதுவே கண்களில் ஏற்பட்டால், கண் கட்டி என்று அழைக்கப்படுகின்றது. பெரும்பாலும், இந்த வகை சூட்டுக் கொப்பளங்களைக் குணப்படுத்த மருந்துகள் தேவை இல்லை. உங்கள் வீட்டிலேயே இருக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு குணப்படுத்தி விடலாம்.

எப்போது மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொள்வது?

சூட்டுக் கொப்பளம் ஏற்பட்டு அதன் தாக்கம் அதிகரிக்கும் போது, நீங்கள் நிச்சயம் மருத்துவ உதவி பெற வேண்டும்.

உங்களுக்கு நீரழிவு நோய் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தால், மருத்துவரின் உதவியைப் பெற வேண்டும்.

பெரும்பாலும் கட்டிகளுக்கு உடனடியாக மருத்துவ அவசர சிகிச்சை தேவை இல்லை. எனினும், நீங்கள் அதிகம் பலவீனமாக இருந்தால், மருத்துவரின் உதவி தேவை.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com