சென்னையில் 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி.. அதற்கான தீபத்தை டெல்லியில் இன்று மாலை ஏற்றுகிறார் பிரதமர் மோடி!!

சென்னையில் 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ள நிலையில், அதற்கான தீபத்தை டெல்லியில் பிரதமர்  மோடி இன்று மாலை ஏற்றுகிறார்.

சென்னையில் 44 ஆவது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி.. அதற்கான தீபத்தை டெல்லியில் இன்று மாலை ஏற்றுகிறார் பிரதமர் மோடி!!

சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10- ஆம் தேதி வரை 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது.

இதற்கான இலச்சினை மற்றும் சின்னம் சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் தலைமையில் வெளியிடப்பட்டது.

முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான பிரத்யேக ஒலிம்பியாட் தீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று மாலை செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஒலிம்பியாட் தீபத்தை மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

டெல்லி செங்கோட்டையில் இருந்து தொடங்கப்பட்டு, இந்தியாவில் உள்ள 26 மாநிலங்களின் 75 நகரங்களுக்கு பயணித்து, இறுதியாக ஜூலை 28 ஆம் தேதிக்கு முன்பு சென்னை வந்தடையும். ஒலிம்பியாட் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள AT IG அரங்கத்தில் இன்று மாலை 5 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர்,  விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் இந்திய அணியின் வீரர் வீராங்கனைகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.