கனடாவில் வழக்கத்திற்கு மாறாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகர் விக்டோரியாவிலிருந்து 155 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லிட்டன் என்ற கிராமத்தில் அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், சராசரியாக 5 நாட்களில் இப்பகுதியில் 165 மரணங்கள் நிகழும் நிலையில் தற்போது மும்மடங்கு அதிகரித்து 486 பேர் பலியாகியுள்ளனர்.
இத்தகைய திடீர் அதிகரிப்புக்கு வெயிலின் தாக்கம் தான் காரணம் என வானிலையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மரணங்களும் வரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.