5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்...! 6 வது நாள் முடிவில் அதன் மதிப்பு ?

5ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ஏலம் தொடங்கி 6 நாட்களாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆறாவது நாள் முடிவில், 1.50 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம், ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் மற்றும் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், பாரதி ஏர்டெல், வோடோஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் இந்த ஏலத்திற்கு பங்கேற்றுள்ளன. 
 
பல்வேறு குறைந்த, நடுத்தர மற்றும் அதிக அளவிலான அலைவரிசைகளில் ஸ்பெக்ட்ரம், ஏலம் நடந்து வருகிறது.  இது குறித்து, "இந்த 2022 ம் ஆண்டுக்கான ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பித்துள்ள நிறுவனங்கள் 600 MHz, 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz, 2300 MHz, 3300 MHz மற்றும் 26 GHz  அலைவரிசைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்" என தொலைத் தொடர்புத் துறை தெரிவித்திருந்தது. இந்த ஏலத்தில் மொத்தம், 72,097.85 MHz ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு வந்துள்ளது. .

இந்நிலையில், முதல் நாள் ஏலத்தில், ஒரு லட்சத்து 45 ஆயிரம் லட்சம் கோடி ஏலம் போனது. பின்னர், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து ஏலம் நடந்து வரும் நிலையில், நேற்று 6 வது நாள் முடிவில், 37 சுற்றுகள் நடந்து 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தொகை 1 லட்சத்து 50 ஆயிரத்து 130 கோடியை தாண்டியுள்ளது. இன்னும் முடிவு எட்டப்படாததால் 7-வது நாளாக இன்றும் 5ஜி அலைக்கற்றை ஏலம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.