நாட்டில் முதன் முறையாக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக பெண் எம்.பி ஒருவருக்கு சிறை தண்டனை...

தெலுங்கானாவில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக பெண் எம்.பி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் முதன் முறையாக ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக பெண் எம்.பி ஒருவருக்கு சிறை தண்டனை...
Published on
Updated on
1 min read

தெலுங்கானாவில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது ஆளும் ராஷ்ட்ரிய சமிதி கட்சி சார்பில் மகாபூபத் தொகுதியில் வெற்றி பெற்றவர் மலோத் கவிதா. இந்நிலையில் தேர்தல் சமயத்தில் கவிதாவுக்கு வாக்களிக்க கூறி பொதுமக்களிடம் பணப்பட்டுவாடா செய்த சவுகத் அலி என்பவர் பறக்கும் படையினரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கவிதா சொன்னதன் பேரில் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வழக்கில் சம்பந்தபட்ட நடப்பு எம்.பி கவிதாவுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறியுள்ள நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனினும் பணப்பட்டுவாடாவிற்காக முதன்முதலாக பெண் எம்.பிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com