அன்னை தெரசா அறக்கட்டளையின் வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை - நிறுவனம் விளக்கம்

அன்னை தெரசா அறக்கட்டளையின் வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்னை தெரசா அறக்கட்டளையின்  வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை - நிறுவனம் விளக்கம்
Published on
Updated on
1 min read

அன்னை தெரசா அறக்கட்டளையின் வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி இன் இந்தியா என்ற சேவை நிறுவனத்தின் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கியிருப்பதாக அண்மையில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனால் 22 ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு உணவும், மருந்து கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பேசியிருந்தார்.

ஆனால் குறிப்பிட்ட நிறுவனத்தின் வெளிநாட்டு நிதி பெறுவது தொடர்பான முன்பதிவு  விண்ணப்பம் புதுப்பித்தலுக்கு, தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் அது நிராகரிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது.

இந்தநிலையில் தங்களது வங்கி கணக்குகள் முடக்கப்படவில்லை என சேவை நிறுவனம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com