புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா அஞ்சலி - குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில், நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா அஞ்சலி - குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்

புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிறகு தொடர்ந்து சினிமா பிரபலங்கள் அவரது நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் சூர்யா அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினார்.

புனித் ராஜ்குமார் மிகச்சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த மனிதனும் கூட எங்கள் இரு குடும்பத்திற்கும் இடையே பல ஆண்டுகால நட்பு உள்ளது ஒரு சிறந்த நண்பரை இழந்து வாடுகிறோம் இது ஈடு செய்ய முடியாத இழப்பு என சூர்யா கூறினார்.

அதன்பின்னர் புனித் ராஜ்குமார் இல்லத்திற்கு சென்ற நடிகர் சூர்யா, அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.