இலங்கைக்கு எதிரான ஒப்பந்தங்களை அமைச்சரவைக்கு தெரிவிக்க வில்லை - பதவி நீக்கம் ஆனவர்கள் புத்த பிக்குகளிடம் சென்று புகார்

இலங்கைக்கு எதிரான அனைத்து ஒப்பந்தங்களிலும் கையெழுத்து போட்ட பின்னரே , அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டதாக தற்போது பதவி விலக்கப்பட்ட கூட்டணி கட்சிகளின்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இலங்கைக்கு எதிரான ஒப்பந்தங்களை அமைச்சரவைக்கு தெரிவிக்க வில்லை - பதவி நீக்கம் ஆனவர்கள் புத்த பிக்குகளிடம் சென்று புகார்

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார சிக்கல் அங்குள்ள அமைச்சர்க ளையும் விட்டு வைக்கவில்லை. அரசுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்த சில கூட்டணி அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த எம்பிக்கள் அரசின் மக்கள் விரோத போக்கை அம்பலப்படுத்தி உள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட விமல் வீரவன்ச, புத்த மத தலைவர் ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரை சந்தித்து பல தகவல்களை வெளியிட்டுள்ளார். 

குறிப்பாக மக்கள் எரிவாயு வரிசைகளிலும் எரிபொருள் வரிசைகளிலும் மருந்து வரிசைகளிலும் இருந்த நேரத்தில் தான் நாட்டுக்கு  எதிரான  இந்த அனைத்து உடன்படிக்கைகளும் கையெழுத்திடப்பட்டதாக  கூறியுள்ளார். நாட்டிற்குள் தற்போது மிகவும் பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை மோசமாக மாற இடமளிக்க முடியாது என்ற நிலையில்தான் உண்மை நிலவரங்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்ததாகவும் விமல் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com