ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி.... நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது....

மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ரக ஏவுகணையான, ஆகாஷ் பிரைம் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. 

ஆகாஷ் பிரைம் ஏவுகணை  சோதனை வெற்றி....  நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது....

எதிரிநாடுகளின் வான் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணை ஏற்கனவே இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறைந்த வெப்பநிலையில், மிக உயரமான பகுதிகளிலும் துல்லியமாக செயல்படும் வகையில் மேம்படுத்தப்பட்ட  ஆகாஷ் ஏவுகணை இன்று பரிசோதித்து பார்க்கப்பட்டது.

ஒடிசாவின் சந்திப்பூரில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாகத் தாக்கி அழித்தது.