அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம் செய்து வெற்றிகரமாக பூமி திரும்பினார்...

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்பட ப்ளூ ஆர்ஜின் குழுவைச் சேர்ந்த 4 பேர் New Shepard ராக்கெட் மூலம் விண்வெளி சென்று தரையிறங்கினர்.
அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு பயணம் செய்து  வெற்றிகரமாக பூமி திரும்பினார்...
Published on
Updated on
1 min read
உலக அளவில்  விண்வெளி போட்டி நிலவி வரும் நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் New Shepard விண்கலம் மூலம்  அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், அவரது சகோதரர் மார்க், 82 வயதான முன்னாள் பெண் விமானி மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய  4 பேர் விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.
அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து 3,600 கிமீ வேகத்தில் புறப்பட்ட New Shepard ராக்கெட் மூலம்  பெசோஸ் உள்ளிட்ட 4 பேர் சுமார் 11 நிமிடங்கள் விண்வெளியில் மிதந்தனர்.இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட விண்கலம் வளிமண்டல எல்லைக் கோடான கார்மன் கோட்டை கடந்து 6 கி.மீ தொலைவு வரை பயணித்தது. 11 நிமிடம் விண்வெளியில் பயணித்து பூமியை நோக்கி வந்த விண்கலம் பாரசூட் உதவியுடன் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கியது. 
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் உருவாக்கிய விண்கலத்தில் இந்த  பயணம் மேற்கொள்ளப்பட்டது. 1969ல் நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்த இதேநாளில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உட்பட 4 பேர் விண்வெளிக்கு சென்று திரும்பியுள்ளனர். எனவே, விண்வெளி சுற்றுலா இனி பிரபலமாக அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com