
வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் கூடிய ஏர்பாட்ஸ் 3 மாடலை, ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
முற்றிலும் புதிய வடிவமைப்பிலான ஏர்பாட்ஸ் 3-ல் உள்ள புதிய சென்சார்கள், இசையின் அனுபவத்தை மேம்படுத்துகின்றன.
மேலும் இது வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது. அனைவரின் காதுகளிலும் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில், புதிய ஏர்பாட்ஸ் 3 உருவாக்கப்பட்டுள்ளது.
அடாப்டிவ் இ.கியூ. அம்சம் வழங்கப்பட்டுள்ள புதிய ஏர்பாட்ஸ் 3-ன் விலை, 9 ஆயிரத்து 700 ரூபாயில் இருந்து துவங்குகிறது.