குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம்...

குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரைக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரை  கால அவகாசம்...

உணவு மற்றும் பொது விநியோகத்துறை, நுகர்வோர் விவகாரம் இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மக்களவையில் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில், இந்தியாவில் தற்போது 92.8 சதவிகித குடும்ப அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைப்பட்டு விட்டன. எஞ்சியிருப்போரும் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு செப்டம்பர் 30ம் தேதி வரைக்கும் அவகாசம் அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த அவகாசம் அளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக கடந்த மே மாதமே இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது மத்திய நுகர்வோர் அமைச்சகம். அதில், ஆதார் எண்ணுடன் குடும்ப அட்டைகளை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்படுகிறது. அதுவரையில் பொது வினியோக முறையில் பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் ஆதார் எண் இல்லாத பயனாளிகளின் குடும்ப அட்டைகள் பெயர் நீக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனாளிகளுக்கு உணவு தானியங்களை வழங்க மறுப்பு தெரிவிக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அவர்களின் பெயர்களை குடும்ப அட்டைகளில் இருந்து நீக்கவோ, ரத்து செய்யவோ கூடாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.