மதுபான கடைகள் தனியார்மயமாக்கல் - டெல்லி அரசுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்

மதுபான கடைகளை தனியார்மயமாக்கிய டெல்லி அரசை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுபான கடைகள் தனியார்மயமாக்கல் - டெல்லி அரசுக்கு எதிராக பாஜகவினர் போராட்டம்

மதுபான கடைகளை தனியார்மயமாக்கிய டெல்லி அரசை கண்டித்து பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டெல்லியில் 849 மதுபான கடைகளில் 60 சதவீதம் அரசு கட்டுப்பாட்டிலும், 40 சதவீதம் தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாட்டிலும் இருந்து வந்த நிலையில் வருமானத்தை அதிகரிக்கவும், சேவையை மேம்படுத்தவும், டெல்லி அரசு புதிய கலால் வரி கொள்கையைக் கொண்டு வந்தது.

அதன்படி டெல்லியில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 849 மதுபான கடைகளைத் தனியார் நிறுவனத்திற்கு ஏலம் மூலம் விற்பனை செய்தது டெல்லி அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போக்குவரத்து நெரிசலை உருவாக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதாவது டெல்லி அரசு அதன் புதிய கலால் கொள்கையின்படி நகரம் முழுவதும் சட்டவிரோதமாக மதுக்கடைகளை திறப்பதாகவும், குடியிருப்பு மற்றும் மத வழிபாட்டு இடங்களுக்கு அருகில் கடைகள் திறக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள பாஜகவினர், புதிய மதுபானக் கொள்கையை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் எச்சரித்துள்ளனர்.