குஜராத் முதல் மந்திரியாக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு

குஜராத் முதல் மந்திரியாக பூபேந்திர படேல் இன்று பதவியேற்பு

நடந்த முடிந்த குஜராத் தேர்தலில் பாஜக 7 வது முறையாக குஜராத்தில் ஆட்சிகட்டிலில் அமர்கிறது.

காந்திநகரில் நடக்க்கிற கோலாகல  விழாவில் குஜராத் முதல் மதிரியாக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார் விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள் .

 7 வது முறையாக பாஜக ஆட்சி

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 182 இடங்களில் இதுவரை இல்லாத வகையில் அந்தகட்சி 156 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர்ந்து 7 வது முறையாக அந்த மாநிலந்தை ஆளுகின்ற அதிகாரத்தை பாஜகவுக்கு மக்கள் வழங்கி உள்ளனர்.

 அங்கு முதல் மந்திரியாக இருந்து வந்த பூபேந்திரபடேக் ட்காப மீண்டும் முதல் மந்திரியாக பதவி ஏற்பார் என பாஜக மேலிடம் அறிவித்தது. சட்டசபை தேர்தலில் அவர் காட்லோதியா தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆமீ யாஜ்னிக்கை 1 லட்சந்து 92 ஆயிரத்து வாக்குகள் வித்தியாசந்தில் வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றதும் குறிப்பிடதக்கது.

கவர்னருடன் சந்திப்பு:

 அதையடுத்து பாஜகவின் தலைவர் சி.ஆர். பாடில் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பூபேந்திர படேல் அங்குள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் ஆச்சாரிய தேவ்ரத்தை சந்தித்து டான் புதிய முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து தெரிவித்து அதற்கான கடிதத்தை வழங்கினார். புதிய அரசு அமைப்பதற்கு உரிமையும் கோரினார், அதை கவர்னர் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து புதிய முதல் மந்திரியாக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com