கோவாக்சின் தடுப்பூசி ஆர்டரை நிறுத்திவைத்த பிரேசில்...

முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை  கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பிரேசில் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசி ஆர்டரை நிறுத்திவைத்த பிரேசில்...

பாரத் பயோடெக் நிறுவனத்தால் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது கோவாக்சின் தடுப்பூசி. இது தற்போது இந்தியாவில் மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் சர்வதேச நாடுகளுக்கும்  வணிக ரீதியில் ஏற்றுமதி செய்யும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 கோடி கோவாக்சின் டோஸ்களை வாங்க பிரேசில் ஒப்பந்தம் போட்டிருந்த நிலையில் தற்போது முறைகேடு புகார்களைக் கூறி இந்தியாவுடனான ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் மார்செலோ குயிரோகா அறிவித்துள்ளார்.