எல்லை பகுதியில் மீண்டும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சீனா...

லடாக்கின் கிழக்கு பகுதி அருகே சீன எல்லையில் அந்நாட்டு போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டது மேலும் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லை பகுதியில் மீண்டும் போர்  பயிற்சியில் ஈடுபட்டு வரும் சீனா...

இந்திய-சீனா எல்லையில்  கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்த நிலையில்,தற்போது அமைதியான சூழ்நிலை நிலவி வருகிறது.இந்த நிலையில் லடாக்கின் கிழக்கு பகுதி அருகே சீன எல்லையில் அந்நாட்டு போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டது.இதனை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது

 சீனாவின் ஜே11எஸ் போர் விமானங்கள் உள்ளிட்ட 22 போர் விமானங்கள் மற்றும் சில ஜே 16 போர் விமானங்கள் லடாக்கின் கிழக்கு பகுதிக்கு அருகே பயிற்சியில் ஈடுபட்டன. சீன கட்டுப்பாட்டில் உள்ள ஹோடான், கர் குன்சா மற்றும் கஷ்கர் விமான படை தளங்களில் இந்த பயிற்சி நடந்தது.  இந்த பகுதிகளில், அனைத்து விமானங்களையும் தரையிறக்கும் வகையில் சீனா மேம்படுத்தியது என   பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கோடை காலத்தில் சீன படைகள் மற்றும் விமானங்கள் குவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய விமானப்படையும் தனது எல்லைப்பகுதியில் மிக் 29 ரக விமானங்கள் உள்ளிட்ட போர் விமானங்களை நிறுத்தி உள்ளது. ரபேல் போர் விமானங்களையும் இந்த பகுதியில் வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.