சிலிண்டர் விலை குறைவு...இருப்பினும் அதிருப்தியில் இல்லத்தரசிகள்!

சிலிண்டர் விலை குறைவு...இருப்பினும் அதிருப்தியில் இல்லத்தரசிகள்!

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையில் 84 ரூபாய் குறைந்துள்ளது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்கின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 

இதையும் படிக்க : கொப்பரை தேங்காய் கொள்முதல்...தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

இந்நிலையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 1 ஆம் தேதியான இன்று, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் 84 ரூபாய் குறைந்து, ஆயிரத்து 937 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், 14.2 கிலோ எடையிலான சிலிண்டர் ஆயிரத்து 118 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.