
மும்பையை சேர்ந்தவர் வைபவி. இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டார். அப்போது அவர்களுக்கு விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றம், ஆண்டுக்கு 10 நாட்கள் இருவரும் இணைந்து குழந்தைகளுடன் சுற்றுலா சென்று வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இந்தநிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, நேற்று நேபாளத்தின் பொக்காராவிலிருந்து விமானத்தில் புறப்பட்ட இந்தியாவை சேர்ந்த அந்த 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் சென்ற விமானத்தின் நொறுங்கிய பாகங்கள் தற்போது முஸ்தாங் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.