
டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
காற்று மாசை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை அரசு அறிவித்துள்ளது.
அதன்படி சொமேட்டோ, ஸ்விக்கி, ஓலா மற்றும் உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பயன்பாட்டுக்கு இயக்கப்படும் வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளை நிரப்ப கூடாது என பெட்ரோல் பங்குகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.