11 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு.....

இந்தியாவில் 11 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், காய்ச்சல் கண்டறியும் முகாம்களை நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.   
11 மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு.....
Published on: 
Updated on: 
1 min read

தமிழகம், ஆந்திரா, குஜராத், உள்ளிட்ட 11 மாநிலங்களில் சிரோடைப்-டூ டெங்கு காய்ச்சல் பாதிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றும் செப்டம்பர் 10 ஆம் தேதிகளில் மத்திய சுகாதாரத்துறை இது குறித்து மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அமைச்சரவை செயலா் ராஜீவ் கெளபா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. டெங்கு பாதிப்பை முன்கூட்டியே கண்டறிதல், காய்ச்சல் உதவி முகாம்கள் நடத்துதல், போதுமான அளவில் பரிசோதனைக் கருவிகள், மருந்துகளை இருப்புவைத்தல் போன்ற நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவிறுத்தப்பட்டது.

காய்ச்சல் கணக்கெடுப்பு, தொடா்பு அறிதல், ரத்த வங்கிகளில் போதுமான அளவு ரத்தம் இருப்பதை உறுதிப்படுத்துதல் தொடா்பான பணிகளுக்காக குழுக்களை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும் எனவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com