வட இந்தியாவில் களைக்கட்டிய தீபாவளி பண்டிகை...!

டெல்லி, உத்தரப் பிரதசம், குஜராத் உள்ளிட்ட வட இந்தியாவில் தீபாவளி பண்டிகை களைக்கட்டி உள்ளது.

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு ஏராளமானோர் வாகனங்களில் சொந்த ஊர் செல்வதால் ஹரியானா மாநிலம் குருகிராமில் கடும் போக்குவரதது நெரிசல் ஏற்பட்டது. குர்கான்-டெல்லி விரைவுச் சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது. இதேபோல்  டெல்லி காஜிபூர் எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தின் டெல்லி - மீரட் விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 24 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு தீப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. வண்ண வண்ண மின் விளக்குகளால் ஜொலித்த ராமர் கோயிலை பக்தர்கள் கண்டு ரசித்தனர். மேலும் சேலர் ஒளிக்கீற்றுகள் வானில் வர்ணஜாலம் நிகழ்த்திய பிரமிக்க வைக்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க : தீபாவளி எதிரொலி: சிறப்பு பேருந்து நிலையங்களில் அலைமோதிய பயணிகள்...!

குஜராத் மாநிலத்தின் தேவபூமி என்றழைக்கப்படும் துவாரகாவில் உள்ள துவாரகாதீஷ் கோவில் தீபாவளி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பல்வேறு வண்ண மின் விளக்குகளால் ஒளிரவிடப்பட்டுள்ளது. ராஜ்கோட் பகுதியில் உள்ள மாதவ்ராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் மாநகராட்சி சார்பில் தீபாவளியை ஒட்டி பல்வேறு பட்டாசுகள் வெடிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் வானவேடிக்கை உட்பட பல்வேறு வகையான வெடிகள் வெடிக்கப்பட்டது. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

தீபாவளிக்கு முந்தைய நாளில் தங்கம் வாங்க உகந்த நாளாக கருதப்படுவதால் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், அசாமின் கவுகாத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோர் நகைகடைகளில் தங்களுக்கு விருப்பமான தங்க நகைகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.