டெல்டா பிளஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுகிறதா? முடிவுகள் 7-10 நாட்களில் வெளியாக வாய்ப்பு...

டெல்டா பிளஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுகிறதா என்ற ஆய்வு நடைபெற்று வருகிறதாகவும், அதன் முடிவுகள் 7 முதல்10 நாட்களில் வெளியாகும் என மத்திய சுகாதாரத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.

டெல்டா பிளஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செயல்படுகிறதா?  முடிவுகள் 7-10 நாட்களில் வெளியாக வாய்ப்பு...

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையில் அதிகபட்ச பாதிப்புகள் கண்டறியபட்ட நிலையில் பாதிப்பிற்கான காரணம் குறித்து தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சமுதாய பரவல், குடும்ப வழி பரவல், மீண்டும் நோய் தொற்றால் பாதித்தவர்கள், தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள்,  12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என பல்வேறு வகைப்பாட்டின் அடிப்படையில் 1159 மாதிரிகள் பெங்களூரில் உள்ள வைரஸ் மரபு குறித்த ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டது. 

அதில் 556 மாதிரிகளுக்கான முடிவுகள் வெளியாகிய நிலையில் 386 பேருக்கு டெல்டா வகை கொரனோ பாதிப்புகள் கண்டறியப்பட்டது. மேலும் 47 பேருக்கு ஆல்பா வகை பாதிப்புகள் மற்றும் 9 பேருக்கு டெல்டா பிளஸ் கொரொனா தொற்று இருப்பதை சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் டெல்டா பிளஸ் தொற்றுக்கு எதிராக கொரொனா தடுப்பூசி செயல்படுகிறதா என்பது குறித்தான ஆய்வினை மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதற்கட்ட முடிவில் இரண்டு தடுப்பூசிகளும் டெல்டா பிளஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் என்று முடிவு வந்திருக்கும் நிலையில் அந்த முடிவினை இன்னும் 7 முதல் 10  நாட்களுக்குள் தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரியவந்துள்ளது.