அந்த பொண்ண எனக்கு தெரியாது... அது விபச்சார கும்பல்... மிரட்டி பணம் பறிக்க பாக்குறாங்க!" முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

அந்த பொண்ண எனக்கு தெரியாது... அது விபச்சார கும்பல்... மிரட்டி பணம் பறிக்க பாக்குறாங்க!" முன்னாள் அமைச்சர் மணிகண்டன்

தன் மீது பாலியல் புகார் அளித்திருக்கும் பெண் தனக்கு யார் என்றே தெரியாது என்றும் அவர்கள் மிரட்டி பணம் பறிக்கும் விபாச்சர கும்பல் என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்க அளித்துள்ளார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நாடோடிகள் திரைப்பட நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் நேற்று  அளித்துள்ளார். மலேசிய நாட்டை பூர்வீகமாக கொண்ட நடிகை சாந்தினி சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். 36 வயதான இவர் நாடோடிகள் உட்பட 5 தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மலேசிய சுற்றுலா துறையிலும் பணிபுரிந்து வருகிறார். இவர் தமிழில் 5 படங்களில் நடித்துள்ளார்.

காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், தமிழக தொழில்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் 2017-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. மலேசியாவில் முதலீடு செய்வது தொடர்பாக என்னிடம் பழகினார். நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. மணிகண்டன் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்துவிட்டு திருமணம் செய்து கொள்வதாக கூறியதையடுத்து அவருடன் நெருங்கி பழகினேன். இருவரும் கணவன் மனைவியாக சுற்றி வந்தோம்.

தற்போது மணிகண்டன் என்னை திருமணம் செய்துக்கொள்ள மறுக்கிறார். அவரை நம்பி அவருடன் கடந்த 5 வருடங்களாக ஒன்றாக வசித்து வந்தேன். மணிகண்டனால் தான் 3 முறை கர்ப்பமாகி கருவை கலைத்துள்ளேன். திருமணம் செய்ய மறுத்ததுடன் அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடப் போவதாக மிரட்டுகிறார். முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்ககோரியும்,தனது அந்தரங்க புகைப்படத்தை மணிகண்டனிடம் இருந்து பெற்று தர வேண்டும் என்றும் சைபர் கிரைம் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்து விளக்கமளித்துள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன் மீது பாலியல் புகார் அளித்திருக்கும் பெண் தனக்கு யார் என்றே தெரியாது என்றும் அவர்கள் மிரட்டி பணம் பறிக்கும் விபாச்சர கும்பல் என கூறியுள்ளார். மேலும் மிரட்டி தன்னிடம் 3 கோடி ரூபாய் பணம் கேட்டனர் என்றும் தான் முடியாது என்றதால், 2 மற்றும் 1.5 கோடி ரூபாய்  கேட்டு மிரட்டினார். தான் ஒரு ரூபாய் கூட பணம் தரமுடியாது என கூறியதால் கடைசியாக 10 லட்சம் ரூபாய் பேரம் பேசினர். மேலும் இந்த கும்பல் இயக்குநர், நடிகர்,மற்றும் சில தொழிலதிபர்களிடம் இதேபோன்று பாலியல் குற்றச்சாட்டு கூறி பணம் பறித்துள்ளதாக கூறினார்.

மேலும் தன் அமைச்சராக இருந்தபோது நிறைய பேர் புகைப்படம் எடுத்துள்ளனர், அந்த புகைப்படத்தை வைத்து எடிட் செய்து இது போன்ற பணம் பறிக்கும் காரியங்களில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.