பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 3 மாதத்திற்கு கால அவகாசம்  நீட்டிப்பு...

பான் எண்ணுடன் ஆதார் இணைக்கும் கால அவகாசம் மேலும் 3 மாதத்திற்கு  நீட்டிக்கப்பட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும்  3 மாதத்திற்கு கால அவகாசம்   நீட்டிப்பு...
Published on
Updated on
1 min read

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 2021  ஜுன் 30 ஆம்  தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைப்பது அவசியம் என்றும் அதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.அத்துடன்  ஜூலை 1-ந் தேதிக்கு பிறகும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும்  மத்திய அரசு எச்சரித்திருந்தது.

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக 3 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை  அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com