டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற சிறப்பு யாகம் செய்து வழிபாடு நடத்திய ரசிகர்கள்

பெங்களூருவில் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி, கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு யாகம் செய்து வழிபாடு நடத்தினர்

டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற சிறப்பு யாகம் செய்து வழிபாடு நடத்திய ரசிகர்கள்

இவ்வாண்டு டி-20  உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்களும், பயிற்சி ஆட்டங்களும் நிறைவடைந்துள்ளன. சூப்பர் 12 போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளது. மொத்தம் 29 நாட்கள் டி 20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி நவம்பர் 14ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.


‘ஐபிஎல்’ போட்டிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் போட்டியானது தற்பொழுது சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று பெங்களூருவில் இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் சுமார் 50 பேர் ஒன்று கூடி மில்லர்ஸ் சாலையில் உள்ள பூர்னசந்ரேஸ்வரா கோவிலில் இந்திய அணி டி 20 உலக கோப்பை தொடரில் வெற்றி பெற வேண்டி சிறப்பு யாகங்கள் செய்து வழிபாடு நடத்தினர்.

இந்திய அணி உலக கோப்பையை வென்றெடுக்க விஜயலட்சுமி ஹோமம், இந்திய அணி வீரர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க தன்வந்திரி ஆரோக்யோம் மற்றும் 
கனபதி ஹோமம் நடத்தி வழிபாடு நடத்தபட்டது குறிப்பிடதக்கது.