
விளைந்து நிற்கும் சோள கதிர்களை பறவைகளிடம் இருந்து காப்பாற்ற விவசாயியின் நூதன முயற்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக விளைந்து நிற்கும் கதிர்களை பறவைகள் வீணடிப்பது விவசாயிகளுக்கும் ஒரு பெரும் தலைவலியாகவே உள்ளது. இதனை சமாளிக்க பரன் அமைத்து காவல் காத்தும், சோளக்கொல்லை பொம்மைகள் அமைத்தும் விவசாயிகள் பாயிர்களை காப்பாற்ற போராடுவர்.
ஆனால் இங்கோ விவசாயி ஒருவர் பறவைகளை விரட்ட புதுவித யுக்தியை கையாண்டுள்ளார். அதாவது தானியங்கி ஒலி எழுப்பி கருவியை தயாரித்து அதனை சோள கதிர்களுக்கு இடையே நட்டு வைத்துள்ளார். இக்கருவி எழுப்பும் ஒலியால் பறவைகள் பயந்து ஓடுகிறது.