பஞ்சாப் மாநிலத்தில் தடுப்புகளை உடைத்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்...

பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, விவசாயிகள் போலீசாரின் தடுப்புகளை உடைத்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் தடுப்புகளை உடைத்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்...

மத்திய அரசு கொண்டு புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பல மாதங்களாக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியின் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டு போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் 7-வது மாதத்தை  எட்டியுள்ளது.

இதனையொட்டி, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் இன்று மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அதன்படி, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் போலீசாரின் தடுப்புகளை உடைத்த விவசாயிகள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசார் தண்ணீரை  விவசாயிகள் மீது பீய்ச்சி அடித்து அவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.