மத்திய அரசின் புதிய விதி..... இனிமே வாட்ஸ் அப்பில் ரெட், புளு டிக் ... தீயாய் பரவும் தகவல்...

வாட்ஸ்அப்பில் வதந்திகள் பரவும் என கேள்விபட்டிருப்போம், ஆனால் பற்றியே வதந்திகளை சிலர்  பரப்பி வருகின்றனர்

மத்திய அரசின் புதிய விதி..... இனிமே வாட்ஸ் அப்பில் ரெட், புளு டிக் ... தீயாய் பரவும் தகவல்...

மத்திய அரசின் புதிய ஐடி சட்ட விதிகளின்படி நீங்கள் இன்னொருவருக்கு அனுப்பும் மெசெஜ்களில் காட்டும் டிக் (Tick) அடிப்படையில் அரசு உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என ஒரு செய்தி வாட்ஸ்அப்களில் தீயாய் பரவிக் கொண்டிருக்கிறது.

தற்போது வரை நமது மெசெஜ்கள் ஒருத்தருக்கு அனுப்பினார் ஒரு டிக் காட்டும். அவர் ஆன்லைனில் இருந்தால் 2 டிக் காட்டும். அவர் அதைப் படித்தால் 2 ப்ளு டிக் காட்டும். இது தான் தற்போதைய நடைமுறை.

ஆனால் புதிய விதிகளின்படி, “3 ப்ளு டிக் காட்டினால் உங்களுடைய மெசெஜை படித்ததாக அர்த்தம். 2 ப்ளு டிக்குடன் 1 ரெட் டிக் காட்டினால் அரசு உங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தமாம். 

அதே 1 ப்ளு டிக்குடன் 2 ரெட் டிக் காட்டினால் உங்களது தரவுகளை அரசு பார்த்துக் கொண்டிருக்கிறதாம். அதேபோல மூன்றுமே ரெட் டிக் காட்டினால் உங்களுக்கு எதிராக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போகிறது என்று நினைத்துக்கொள்ள வேண்டுமாம்”. இப்படியொரு செய்தி வாட்ஸ்அப்களில் பரவி வருகிறது.

இது உண்மையா இல்லையா என்பதை அரசின் செய்தி முகமையான பிஐபி (PIB) தெளிவுபடுத்தியிருக்கிறது. 

இப்படியொரு நடைமுறை வருவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது முற்றிலும் பொய்யானது. இவ்வாறான நடவடிக்கைகள் அரசு தரப்பிலோ வாட்ஸ்அப் தரப்பிலோ எதுவும் கூறவில்லை என்று தெரிவித்துள்ளது. 

முன்னதாக அரசின் ஐடி விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது. இதற்கிடையே புதிய விதிகளுக்குட்படுமாறு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு 15 நாட்கள் காலக்கெடு விதித்திருக்கிறது