உலக பணக்காரர்களின் பட்டியலில் 4 - வது இடம் பிடித்த கெளதம் அதானி...அம்பானிக்கு எந்த இடம் ?

போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்களின் பட்டியலில் அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான கெளதம் அதானி உலக பணக்காரர்களின் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

உலக பணக்காரர்களின் பட்டியலில் 4 - வது இடம் பிடித்த கெளதம் அதானி...அம்பானிக்கு எந்த இடம் ?

பில் கேட்ஸ் நன்கொடை : 

கடந்த புதன்(13.07.2022) அன்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது சொத்தில் 20 பில்லியன் டாலர்களை,தனது லாப நோக்கற்ற நிறுவனமான பில் & மெலிண்டா கேட்ஸுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்திருந்தார். தனது நன்கொடை குறித்து ஒரு அறிக்கையில், அதிகமாக நன்கொடைகள் வழங்குவதன் மூலம், தற்போது மக்கள் எதிர்கொள்ளும் சில துன்பங்களைத் தணிக்க முடியும் என்று தான் நம்புவதாகவும், ஒவ்வொரு நபருக்கும் ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கான அறக்கட்டளையின் தேவையை நிறைவேற்ற உதவ முடிவதாகவும் பில் கேட்ஸ் கூறி இருந்தார். 

4 - வது இடம் பிடித்த அதானி : 

பில் கேட்ஸின் இந்த நன்கொடையை தொடர்ந்து, போர்ப்ஸ் வெளியிடடுள்ள உலக பணக்காரர்களின் பட்டியலில் 102 பில்லியன் டாலர் மதிப்புடன் 5 - வது இடத்தை பிடித்துள்ளார், பில் கேட்ஸ்.  போர்ப்ஸ் - இன் தரவு படி, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் உலக பணக்காரர்களின் பட்டியலில் 230 பில்லியன் டாலர் மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார்.  அதே நேரம் கௌதம் அதானி, 114 பில்லியன் டாலர் மதிப்புடன் 4 - வது இடத்தை பிடித்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, 88 பில்லியன் டாலர் மதிப்புடன் 10 - வது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அதானி, அம்பானியை முந்தி சென்று ஆசிய பணக்காரர்களில் ஒருவராக இடம்பிடித்தவர், தற்போது உலக பணக்காரர்களில் 4 வது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.