கனமழையால் சேதமடைந்த அரசு மருத்துவமனைக் கட்டிடம்... பால் சீலிங்' பெயர்ந்து விழுந்து விபத்து...

தெலங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் சீலிங் இடிந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் மீது விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனமழையால் சேதமடைந்த அரசு மருத்துவமனைக் கட்டிடம்...  பால் சீலிங்' பெயர்ந்து விழுந்து விபத்து...

தெலங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், அங்குள்ள அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவுக் கட்டிடம் சேதமடைந்து பால் சிலிங் பெயர்ந்து விழுந்தது.

நல்லவாய்ப்பாக அங்கிருந்த நோயாளிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.

மேலும் பாதுகாப்பு கருதி அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் வேறு பிரிவிற்கு மாற்றப்பட்டனர். இச்சம்பவத்தால் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் பீதி அடைந்தனர்.