" 2000 நோட்டு பற்றி எனக்கு கவலை இல்லை...! ஏன்னா,.. என் கோட்டும் ஒயிட்டு, நோட்டும் ஒயிட்டு " - தமிழிசை சௌந்தரராஜன்.

" 2000 நோட்டு பற்றி  எனக்கு கவலை இல்லை...! ஏன்னா,..  என்  கோட்டும் ஒயிட்டு, நோட்டும் ஒயிட்டு "  - தமிழிசை சௌந்தரராஜன்.

முதலமைச்சா் ரங்கசாமிக்கும், தமக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் வராது என புதுச்சோி துணை நிலை ஆளுநா் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகிய கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில்,...

தொழில் முனைவோரில் 16 சதவீதம் பெண்கள் தான் உள்ளார்கள்; கல்வி சுதந்திரத்தை பெற்று விட்டோம், பொருளாதார சுதந்திரத்தை பெறவேண்டும் என்றால் பெண்கள் தொழில் முனைவராக வரவேண்டும் என்றவர், இந்த தளத்தில் நிற்பதற்கு எத்தனை தடைகள் வந்தாலும் அதனை தவிடுபொடியாக்கக் கூடிய  தன்னம்பிக்கை இருந்தது அந்த தன்னம்பிக்கையால் மட்டுமே நான் இருந்து கொண்டிருக்கின்றேன் என்றார். 

மேலும் அரசியல் என்பது ஒட்டுமொத்தமாக  பெண்களுக்கான ஒரு துறை கிடையாது, பெண்கள் அதில் முன்னே வந்து, அதில் முன்னேற வேண்டும் என்றால் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், பாதை ஒன்றும் மலர்பாதை அல்ல, முட்களாலும், கற்களாலும் கால்களை குத்திக்கிழிக்கும் பாதை தான்,  அதிலும் வேகமாக நடைபோட்டால் முன்னுக்கு வர முடியும், பெண்கள் அரசியலுக்கு வரவேண்டாம் என நினைக்காதீர்கள், எப்படி மாணவிகள் தொழில்முனைவோர்களாக மாற வேண்டும் என்று சொல்கின்றேனோ அதேபோல் பெண்கள் அதிகமாக அரசியலுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையை உங்களிடம் வைக்கின்றேன், அதிகமாக படித்த பெண்கள் வரவர அரசியல் தூய்மையாகும் என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் வாழ்க்கை வாழ்வதற்காகத்தான் ;  மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளக் கூடாது, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்த வேண்டும், தற்காப்புக்கலையும் கற்றுக்கொடுக்க வேண்டும். இது சிந்தனையில் உள்ளது.  முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் கருத்து வேறுபாடு வருமா என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி எதிர்பார்த்து வருகின்றார். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வராது.  முதலமைச்சரிடமிருந்து வரும் கோப்புகளைத்தான் நான் ஒப்புதல் அளித்து அனுப்புகின்றேன். ரங்கசாமி அனைத்து கோப்புகளிலும் ஒப்புதல் பெறுகின்றார் என்று தான் நாராயணசாமிக்கு கவலையாக உள்ளது என்றார்.

தொடர்ந்து இரண்டாயிரம் ரூபாய் திரும்பப்பெறும் என்ற அறிவிப்பு குறித்து கேட்டதற்கு. எனக்கு அதுபற்றிய தகவல் தெரியவில்லை ஆனால் எனக்கு கவலையில்லை ஏனென்றால் எனது கோட்டும் ஒயிட்டு, நோட்டும் ஒயிட்டு, ஆனால் அதை வைத்திருப்பவர்கள் நேர்மையாக செய்து கொள்ளவேண்டும் என வலியுறுத்தினார்.

இதையும் படிக்க      } ''கனிமவள கொள்ளை அடுத்தகட்ட நகர்வு குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும்'' அண்ணாமலை!