நாகாலாந்து, மேகாலயாவில் இறுதி கட்ட பிரசாரம் தீவிரம்...!

நாகாலாந்து, மேகாலயாவில் இறுதி கட்ட பிரசாரம் தீவிரம்...!

நாகலாந்து, மேகாலயாவில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன்பு திரிபுராவில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதையும் படிக்க : ஈவிகேஎஸ் இளங்கோவன் வருகை....பதவி இழக்கிறாரா செல்வ பெருந்தகை?

தொடர்ந்து மேகாலயா மற்றும் நாகலாந்தில் வரும் 27ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயாவை பொருத்தவரை 60 இடங்களுக்கு பாஜக, காங்கிரஸ் உட்பட 11 கட்சிகளைச் சோ்ந்த 375 பேர் போட்டியிட்டுள்ளனர்.

அதேபோல் நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு 183 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்வதால் அரசியல் கட்சியினர் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.