அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்.. போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு!!

இலங்கையில், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்..  போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு!!

இலங்கையில் வரிக்குறைப்பு, கொரோனா பரவல் உள்ளிட்டவற்றால் வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் தட்டுப்பாடு நிலவுவதுடன், தினசரி 13 மணி நேரம் மின்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அரசின் நிர்வாக குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர், நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இல்லத்தை முற்றுகையிட்டு, பதவி விலக வலியுறுத்தினர். 

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், தடுப்பு வேலிகளை அகற்றி,  அங்கிருந்த வாகனங்களுக்கு நெருப்பு வைத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டு வீசியும், போலீசார் கூட்டத்தை கலைத்தனர். மேலும் உடனடியாக கொழும்பு நகர் முழுவதும் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.  

இந்தநிலையில், அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அதிபர் மாளிகையைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.