கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை.. பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது!!

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை நாடாளுமன்றம் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை.. பரபரப்பான சூழலில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது!!
Published on
Updated on
1 min read

வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக அரசின் தடையையும் மீறி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு இடங்களில் வன்முறையும் வெடித்துள்ளது.

இதனிடையே, பிரதமர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனையடுத்து, 4 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை சிறிசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சியும் திரும்ப பெற்றுள்ளது. இந்த பரப்பான சூழ்நிலையில் இன்று  இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இந்நிலையில், தொடர் பொருளாதார நெருக்கடி, எரிவாயு பற்றாக்குறை, மின்தடை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com